போச்சம்பள்ளி அருகே மதுபாட்டில்கள் கடத்திய வாலிபர் கைது.

1பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே முதுகாம்பட்டி கிராமத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போச்சம்பள்ளி போலீசார், சந்தேகத்திற்கிடமான ஆம்னி காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் 40க்கும் மேற்பட்ட குவாட்டர் மதுபாட்டில்கள் இருந்தன. விசாரணையில், சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த முனீஸ்வரன் என்பவர் மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, மதுபாட்டில்களையும் ஆம்னி காரையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி