அதிமுக சார்பில் வாக்குச் சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

406பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதி கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் கண்ணன்ட ஹள்ளியில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் கே. அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஒன்றிய கழக செயலாளர் ஜெயபால் வரவேற்புரை ஆற்றினார். அதிமுக கழக துணை பொது செயலாளர் வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே. பி. முனுசாமி மற்றும் சேலம் புறநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் தமிழ்வாணன் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர். பர்கூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி. வி. ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி