கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசம்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ தென்னீஸ்வரன் கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மூலவர் தென்னீஸ்வரனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டு, காய்கறி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது.