கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலில் 15-ஆம் ஆண்டு வருடாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், அலங்கார பூஜைகள் மற்றும் மகாதீபாராதனை நடத்தப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.