கிருஷ்ணகிரி: தனியார் பேருந்து மோதி ராணுவ வீரரின் மனைவி பலி

832பார்த்தது
கிருஷ்ணகிரி: தனியார் பேருந்து மோதி ராணுவ வீரரின் மனைவி பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே நாகரசம்பட்டி காட்டுக்குள்ள கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சத்தியகுமார், தனது மனைவி திவ்யா மற்றும் இரு குழந்தைகளுடன் வேலம்பட்டி வாரச் சந்தைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சம்பவதினத்தன்று சென்றாயன்பட்டி அருகே தனியார் பேருந்து மோதியதில் புல்லட்டில் சென்ற 4 பேரும் படுகாயமடைந்தனர். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திவ்யா உயிரிழந்தார். இது குறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி