கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னமாட்டாரப்பள்ளி ஊராட்சியில் உள்ள விநாயகர் கோயில் முன்புறம் பல நாட்களாகக் குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்துள்ளன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், ஈக்கள் மற்றும் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகியுள்ளன. உடனடியாக ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.