போச்சம்பள்ளி அருகே குப்பைகளால் துர்நாற்றம்.

242பார்த்தது
போச்சம்பள்ளி அருகே குப்பைகளால் துர்நாற்றம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அகரம் கூட்ரோடு பகுதியில் டீ கடைகள், மளிகை கடைகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகளை அப்பகுதியிலேயே கொட்டி செல்வதால், தற்போது பெய்து வரும் மழையால் துர்நாற்றம் வீசி, சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். உடனடியாக குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி