கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்துள்ள பட்லப்பள்ளி ஊராட்சியில் உள்ள மல்லன் வட்டம் கிராமத்தில் கன்று விடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற இல்லாமல் நடந்ததாக பட்லப்பள்ளி வி.ஏ.ஓ. மரகதம் பர்கூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் கன்று விடும் விழாவை அனுமதி இன்றி ஏற்பாடு செய்ததாக அந்த பகுதியைச் சேர்ந்த ரஜினி (40) அருள் (34) சின்னத்தம்பி (40) விஜயன் (47) அண்ணாதுரை (32) ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.