கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த நேரலக்கொட்டாய் கிராமத்தில் கடந்த 5-ம் தேதி நடந்த மாரியம்மன் கோயில் திருவிழாவை ஒட்டி வைக்கப்பட்ட பதாகைகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இது தொடர்பாக பர்கூர் போலீஸார் வழக்குப் பதிந்து, பதாகைகளை அச்சிட்ட அச்சக உரிமையாளர் தேவராஜ் (26) மற்றும் ஜீவா (19) உள்ளிட்ட 4 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.