கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கந்திகுப்பம் ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில் ரூ. 80.37 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, காத்திருப்பு கூடம், தார்சாலை, பள்ளி சுற்றுச்சுவர், சிமெண்டு சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளுக்கு பர்கூர் எம்.எல்.ஏ. டி. மதியழகன் பூமி பூஜை செய்து பணிகளைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.