கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே காளிகோவில் பகுதியைச் சேர்ந்த ஜான்பாஷா (43) என்பவர் மளிகைக் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் கிருஷ்ணகிரியில் இருந்து குப்பம் செல்லும் சாலையில் நடந்து சென்றபோது, லாரியில் இருந்து இரும்பு பாரம் அவர் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த ஜான்பாஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கந்திகுப்பம் போலீசார் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.