கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் பெய்த கனமழையால் மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. இதன் காரணமாக இப்பகுதிகளில் பச்சோந்திகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அகரம்-காரிமங்கலம் சாலையில் சென்ற ஒரு பெரிய பச்சோந்தியை வாகன ஓட்டிகள் கண்டு வியந்து, அதன் புகைப்படங்களை எடுத்துச் சென்றனர். இப்பகுதியில் பச்சோந்திகள் அதிகளவில் காணப்படுவது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.