கிருஷ்ணகிரி மாவட்டம் புளியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு கணித ஆசிரியர் குமார், திமுக அரசுக்கு ஆதரவாகவும், காவி நிறத்தை இழிவுபடுத்தும் வகையிலும் பேசியதாக பாஜக சார்பில் நேற்று போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், ஆசிரியர் குமாரை பணியில் இருந்து நீக்கி, கைது செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. அதிமுக, பாமக உள்ளிட்ட என்டிஏ கூட்டணி கட்சியினர் இந்த புகாரில் பங்கேற்றனர்.