கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ-நாம் முறையில் கொப்பரை தேங்காய் ஏலம் நேற்று நடைபெற்றது. இதில், 3,963 கிலோ கொப்பரை தேங்காய்கள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்சம் ₹161.61, குறைந்தபட்சம் ₹70.19, சராசரியாக ₹157.89 என மொத்தம் ₹5.79 லட்சத்திற்கு விற்பனையானது. இந்த ஏலத்தில் 55 விவசாயிகள் பயனடைந்தனர். விற்பனை செய்யப்பட்ட தொகை உடனடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.