கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே சாதி நாயக்கன்பட்டி கிராமத்தில், தேர்தலுக்காக அகற்றப்பட்ட திமுக கொடி கம்பத்தில் மர்ம நபர்கள் தவெக கொடியை ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த திமுகவினர் சம்பவ இடத்திற்கு குவிந்தனர். பாரூர் போலீசார் தலையிட்டு திமுகவினருடன் சமாதானம் பேசி, தவெக கொடியை அகற்றினர்.