கிருஷ்ணகிரி: கொல்ல முயன்ற வழக்கில் தி.மு.க. பிரமுகர் கைது

816பார்த்தது
கிருஷ்ணகிரி: கொல்ல முயன்ற வழக்கில் தி.மு.க. பிரமுகர் கைது
கிருஷ்ணகிரி ஒன்றியம் பெல்லம்வள்ளி ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்த முருகன் (49) என்பவரை, சிகரப்பள்ளி ஊராட்சி காட்டூரை சேர்ந்த சிவக்குமார் (40) கூலிப்படை மூலம் கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. கடந்த 7-ம் தேதி முருகனின் வீட்டிற்கு சென்றபோது காரில் வந்த மர்ம நபர்கள் அவரை தாக்க முயன்றனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சிவக்குமார் கூலிப்படை மூலம் கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து சிவக்குமார் கைது செய்யப்பட்டார். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி