கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில், திமுக ஒன்றியத்தின் சார்பில் பர்கூர் எம்.எல்.ஏ. தே. மதியழகன் அவர்களின் ஆலோசனைப்படி, திராவிட பொங்கல் சமூக நீதிக்கான திருவிழா மாபெரும் ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளை மத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் குண. வசந்தரசு மற்றும் நரசிம்மன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர். கபடி போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.