போச்சம்பள்ளி அகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் பாதிப்பு குறித்து தலைமை ஆசிரியர் பிரேம் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாகரசம்பட்டி காவல் ஆய்வாளர் தொல்காப்பியம் கலந்து கொண்டு, போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் உடல்நலக் கேடுகள் மற்றும் சட்டப்பூர்வமான விளைவுகள் குறித்து மாணவர்களை எச்சரித்தார். மேலும், மாணவிகள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியமானது என்றும், அச்சுறுத்தல்கள் அல்லது தொந்தரவுகள் குறித்து பயமின்றி புகார் அளிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.