கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே முருக்கம்பள்ளம் திரௌபதி அம்மன் கோவிலில் 52-ம் ஆண்டு மகாபாரத திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் 30 அடி உயர துரியோதனன் உருவ பொம்மை மண்ணால் செய்யப்பட்டது. பீமன் துரியோதனனை வதம் செய்து திரௌபதியின் சபதம் நிறைவேறும் வகையில் கூந்தல் முடிக்கும் நிகழ்வு நடைபெற்றது. மேலும், திருநங்கைகள் கைகளால் பக்தர்கள் துடப்பத்தால் அடி வாங்கி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டனர். இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர்.