தென்னை மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து விவசாயி பலி.

0பார்த்தது
தென்னை மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து விவசாயி பலி.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பண்ணந்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாதேஷ் (38), நேற்று முன்தினம் தனியார் பள்ளி அருகே உள்ள தென்னந்தோப்பில் தேங்காய் பறிக்கும்போது மரத்திலிருந்து தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி