கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வாரச்சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற வாரச்சந்தையில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு தரப்பட்ட ஆடுகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு ஆடு ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 35 ஆயிரம் வரை விற்பனையானது. வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கியதால், வாரச்சந்தையில் சுமார் 2 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் சந்தை களைகட்டியது.