போச்சம்பள்ளி பகுதிகளில் பூத்து குலுங்கும் குல்மோகர் மலர்கள்.

328பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், சாலை ஓரங்களில் உள்ள குல்மோகர் மரங்கள் தற்போது செந்நிறப் போர்வையைப் போர்த்தியது போல குல்மோகர் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. மருத்துவ குணம் கொண்ட இந்த மலர்கள் மார்ச் முதல் மே மாதம் வரை பூக்கும். வெயிலின் தாக்கத்திற்கு மத்தியில் ரம்மியமாக காட்சி தரும் இந்த மலர்கள், அப்பகுதியை ஒரு சுற்றுலாத் தலம் போல மாற்றியுள்ளது. அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் இந்த அழகைக் கண்டு ரசித்து செல்கின்றனர்.

தொடர்புடைய செய்தி