ஒசூர் அருகே சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட மூர்த்தி மற்றும் இந்திரா காதல் ஜோடி, பாதுகாப்பு கேட்டு டி.எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். டி.எஸ்.பி. ஆனந்தராஜ் இரு தரப்பு பெற்றோரை வரவழைத்து, பிரச்சினை செய்யக்கூடாது என எச்சரித்து அனுப்பினார். திருமணத்துக்கு உதவிய மூர்த்தியின் நண்பர்கள் இருவரை தாக்கிய புகாரில், பா.ம.க. கவுன்சிலர் வெங்கடாசலபதி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.