கிருஷ்ணகிரி மாவட்டம், ஓட்டப்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீஹரி ஹரசுதன் ஐயப்ப சுவாமி ஆலயத்தின் நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருவிழா இன்று காலை நடைபெற்றது. வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித கலசங்களை ஊர்வலமாக எடுத்து வந்து, வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது ஐயப்ப பக்தர்கள் 'சுவாமியே சரணம் ஐயப்ப' என்று கோஷம் எழுப்பி பக்தி பரவசத்தில் ஆழ்ந்தனர். பின்னர் பக்தர்களுக்கு அண்ணதானம் வழங்கப்பட்டது.