போச்சம்பள்ளி அருகே கிணற்றில் ஆண் சடலம் மீட்பு

2பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மத்தூர் அடுத்த கோத்தகோட்டா கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டது. மத்தூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, 40 அடி ஆழமுள்ள கிணற்றில் இருந்து சடலத்தை மீட்டனர். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், தற்கொலையா அல்லது கொலையா என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி