போச்சம்பள்ளி அருகே மாரியம்மன் கோவில் திருவிழா.

1பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அகரம் அடுத்த ஆவத்துவாடி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்றனர். பின்னர், பூசாரிக்கு அருள் வந்து தரையில் படுத்திருந்த பக்தர்கள் மீது நடந்து சென்றார். தொடர்ந்து, காவல் தெய்வமான குதிரைக்கு சமைத்த உணவு படையலிட்டு ஊட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி