கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் இருந்து குள்ளனூர் வரை சாலையோர மின் கம்பங்களில் விளம்பர தட்டிகள் கட்டப்படுவதால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், மழை, காற்றால் இந்த தட்டிகள் கழன்று வாகன ஓட்டிகள் மீது விழும் அபாயமும் உள்ளது. எனவே, சாலையோர மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள விளம்பர தட்டிகளை அகற்ற துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.