கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர் நாகலட்சுமி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ரூரல் ஸ்டேஷனுக்கும், நாகரசம்பட்டியில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் போச்சம்பள்ளி காவல் நிலையத்திற்கும் மாற்றலாகினர். இதைத் தொடர்ந்து, போச்சம்பள்ளி காவல் ஆய்வாளராக கோபாலகிருஷ்ணன் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய ஆய்வாளருக்கு காவல் நிலையத்தில் உள்ள உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.