ஆபத்தான நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

64பார்த்தது
ஆபத்தான நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வெப்பாலம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஆவலக்கம்பட்டி கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடுமபங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர் தேவையை போக்க 2013ம் ஆண்டு 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. அதன் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த தொட்டி கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பின்றி உள்ளதால் பாசிகள் படிந்து அசுத்தமாக காணப்படுகிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகரிகள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய தொட்டியை அமைத்துக்கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you