போச்சம்பள்ளி அருகே கம்பி முள்வேலியில் மோதி பெயின்டர் பலி.

2பார்த்தது
போச்சம்பள்ளி அருகே கம்பி முள்வேலியில் மோதி பெயின்டர் பலி.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே கூரம்பட்டியைச் சேர்ந்த மயில்சாமி (25) என்பவர், நண்பர் ரிஷியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, போச்சம்பள்ளி அருகே வேலம்பட்டியில் இருந்து வீட்டிற்கு திரும்பும்போது டேம்காவாய் பகுதியில் உள்ள சாலை வளைவில் கட்டுப்பாட்டை இழந்து கம்பி முள்வேலியில் மோதியதில், மயில்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரிஷி லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.