கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அகரம் ராமகிருஷ்ண ஆசிரமம் அருகில் உள்ள மின் கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்துள்ளன. இதனால் மழைக் காலங்களில் மின் தடை ஏற்பட வாய்ப்புள்ளது. மின் வாரிய அதிகாரிகள் உடனடியாக மின் கம்பிகள் மீது படர்ந்துள்ள செடிகொடிகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.