கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் கோவிந்தராசன் போட்டியிடுகிறார். இதையொட்டி, சுண்டக்காப்பட்டி அவுத்துவாடி, மருதேரி, விளங்காமுடி மல்லிக்கல் கூட்ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து, அதிமுக கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் ரவி மரியா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சாரத்தில் ஒன்றிய கழக செயலாளர் கிருஷ்ணன், அப்பகுதி அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.