போச்சம்பள்ளி: வாகனம் மோதி மின் கம்பம் முறிந்து விழுந்தது.

692பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே புலியூர் கிராமத்தில், போச்சம்பள்ளியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மின் கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மின் கம்பம் இரண்டாக உடைந்தது. உடனடியாக அரசம்பட்டி மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மின் இணைப்பை துண்டித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி