கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மாவத்தூர் கிராமத்தில் உள்ள ஏரியில் மீன் வளர்ப்பவர்கள், இறந்த கோழி குஞ்சுகளை ஏரியில் கொட்டியதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.