கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, தட்ரஹள்ளி, பண்ணந்தூர், கோட்டப்பட்டி, புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டுள்ள மாந்தோப்புகளில் இந்த ஆண்டு மாம்பூக்கள் அதிகளவில் பூத்து குலுங்குகின்றன. இதனால், மாங்காய் விளைச்சல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மாமரங்களில் பிஞ்சுகள் விடத் தொடங்கியுள்ளன. விவசாயிகள் பனி மற்றும் பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்க மருந்து தெளித்து வருகின்றனர்.