போச்சம்பள்ளி: நீதிமன்றம் உத்தரவின் படி கொடி கம்பம் அகற்றம்

82பார்த்தது
போச்சம்பள்ளி: நீதிமன்றம் உத்தரவின் படி கொடி கம்பம் அகற்றம்
கிருஷ்ணகிரி மாவட்டம் வெப்பாலம்பட்டி கிராமத்தில் வருவாய்த்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தின் கொடிகம்பம் நடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி நடப்பட்டிருந்த கட்டுமான தொழிலாளர் வாரியத்தின் கொடிகம்பத்தை அகற்ற கோரி வருவாய்துறையினர் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன்பேரில் கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் அப்பகுதியில் நடப்பட்டிருந்த கொடிகம்பத்தை தாங்களே முன்வந்து அகற்றினார்கள். அப்போது போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா உடன் இருந்தார்.