போச்சம்பள்ளி: குப்பைகளுக்கு தீ -புகையால் வாகன ஓட்டிகள் அவதி.

0பார்த்தது
கிருட்டிணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அகரம் கிராமத்தில் 3-வழி சாலை ஓரத்தில் குப்பை மூட்டைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டது. மேலும், புகை காரணமாக வாகன ஓட்டிகளுக்கும், அருகில் வசிப்பவர்களுக்கும் கண்ணெரிச்சல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டன. தீ வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.