போச்சம்பள்ளி: மின்சாரம் தாக்கி காவலாளி உயிரிழப்பு

0பார்த்தது
போச்சம்பள்ளி: மின்சாரம் தாக்கி காவலாளி உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த முத்தன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த 66 வயதான செல்வராஜ், வேலம்பட்டியில் உள்ள வங்கியில் இரவு நேர காவலாளியாகப் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, தனது வீட்டின் அருகே விவசாய கிணற்றின் மோட்டாரை நிறுத்தும் போது, அறுந்து விழுந்த மின் கம்பியை எதிர்பாராதவிதமாக மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து நாகரசம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி