கிருஷ்ணகிரி: 2 டூவீலர்கள் மோதி தொழிலாளி பலி

66பார்த்தது
கிருஷ்ணகிரி: 2 டூவீலர்கள் மோதி தொழிலாளி பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள புளியம்பட்டி அருகே கூச்சானூரை சேர்ந்தவர் வினோத்குமார் (40) தொழிலாளியானவர். இவர் டூவீலரில் நேற்று முன்தினம் சந்தூர் சாலையில் உள்ள திருவயலூர் என்ற இடத்திற்கு டூவீலரில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு டூவீலர் இவர் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த வினோத்குமாரை மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து வந்த போச்சம்பள்ளி போலீசார் உடலை பரிசோதித்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி