பண்ணந்தூர் சித்தர் கோவிலில் சிவராத்திரி விழா

268பார்த்தது
பண்ணந்தூர் சித்தர் கோவிலில் சிவராத்திரி விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பண்ணந்தூர் சித்தர் கோவிலில் இன்று அதிகாலை நான்காம் கால பூஜை நிறைவடைந்தது. இரவு முழுவதும் சித்தர் பெருமானின் லிங்கத் திருமேனிக்கும் நந்தி தேவருக்கும் பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி