கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் போலீசார் ஒப்பந்தவாடி பேருந்து நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி சோதனையிட்டபோது அவர் 900 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் பொறியியல் கல்லூரியில் படித்து வரும் 17 வயது மாணவர் என்பதும், கஞ்சா விற்பனை செய்வதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.