படிகட்டுகளில் ஆபத்தான நிலையில் பயணம் செய்யும் மாணவர்கள்.

2பார்த்தது
படிகட்டுகளில் ஆபத்தான நிலையில் பயணம் செய்யும் மாணவர்கள்.
கிருட்டிணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் இருந்து ஓலைபட்டி, சிப்காட் ஊத்தங்கரை மற்றும் கல்லாவிக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஊத்தங்கரையில் இருந்து காலை 7 மணிக்கு போச்சம்பள்ளி நோக்கி வரும் அரசு நகர பேருந்து மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் செல்லும் நேரத்திற்கு உகந்ததாக இல்லாததால் அதில் யாரும் பயணிப்பதில்லை. அதன் பிறகு வரும் பேருந்துகளில் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் கூட்டம் அதிகமாக இருப்பதால், படிக்கட்டுகளிலும், பேருந்து பின்புற ஏணியிலும் தொங்கியபடியும், நின்றபடியும் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நேரத்தில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

தொடர்புடைய செய்தி