கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே அத்திகானூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முருகனின் மனைவி கவுரி (52), பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மன உளைச்சல் தாங்காமல் மருந்து உட்கொண்டு மயங்கி விழுந்தார். உறவினர்களால் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.