தமிழ்நாடு முழுவதும் உள்ள சிப்காட் தொழிற்பூங்காக்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தொழில் பேட்டையில் நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ்குமார் மற்றும் பர்கூர் எம்எல்ஏ மதியழகன் ஆகியோர் கலந்துகொண்டு கொடியசைத்து தூய்மைப் பணிகளைத் துவக்கி வைத்தனர். இந்த நிகழ்வில் அதிகாரிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.