ஒட்டப்பட்டியில் ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலம்

0பார்த்தது
போச்சம்பள்ளி அடுத்த ஒட்டப்பட்டி கிராமத்தில் ஐயப்பன் கோவில் கும்பாபிஷேக திருவிழா இன்று சிறப்பாக நடைபெறுகிறது. ஐயப்ப சாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, ஓம குண்டங்கள், பம்பை மேளதாளங்களுடன் குருக்கள் மந்திரங்கள் ஓத, தென்பெண்ணை ஆற்றங்கரிலிருந்து பெண்கள் தீர்த்தக் குடங்கள் எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து, ஊர் பொதுமக்கள் விழா எடுக்கின்றனர். கும்பாபிஷேகம் முடிந்தவுடன் அன்னதானம் நடைபெறுகிறது. பக்தர்கள் சுவாமி தரிசனம் பெற்றுச் செல்கின்றனர்.