பல்நோக்கு கட்டிடம் கட்ட பூமி பூஜை -எம்பி தொடங்கி வைத்தார்.

1பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே வீரமலை ஊராட்சியில், இன்று (பிப்-07) ரூ. 9 லட்சம் மதிப்பீட்டில் புதிய பல்நோக்கு கட்டிடம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முன்னாள் மக்களவைத் துணைத் தலைவரும், ராஜ்யசபா உறுப்பினருமான முனைவர் தம்பிதுரை, பணிகளைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் முன்னாள் பர்கூர் எம்எல்ஏ சி. வி. ராஜேந்திரன், ஜெயபால், முன்னாள் காவேரிப்பட்டிணம் ஒன்றிய செயலாளர் பிரபாகரன், அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி