கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் மாம்பழ மண்டிகளில் அழுகிப்போன மற்றும் அடிபட்ட மாங்காய்களை சாலை ஓரங்களில் கொட்டி செல்வதால் கடும் துர்நாற்றம் வீசி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உடனடியாக ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அழுகிய மாங்காய்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.