மத்தூர் அருகே மூதாட்டியை தாக்கி கம்மல் பறித்த 3 பேர் கைது

803பார்த்தது
மத்தூர் அருகே மூதாட்டியை தாக்கி கம்மல் பறித்த 3 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே சரோஜா (60) என்பவர், தனது மாந்தோப்பில் வேலைக்குச் சென்றபோது, தனியார் நிறுவன வாட்ச்மேன்களான சந்தோஷ் (37), வினோத் (32), கார்த்திக் (30) ஆகியோர் சேர்ந்து அவரைத் தாக்கி, காதில் அணிந்திருந்த 4 கிராம் கம்மலைப் பறித்துள்ளனர். இதுகுறித்து சரோஜா அளித்த புகாரின் பேரில், மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர். மூவரும் போச்சம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி