கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகிலுள்ள எழக்கல்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் திருவேங்கடம் (30) ஜெகதேவி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (30) டிரைவர்களான இவர்கள் இருவரும் சின்ன பர்கூர் அருகே உள்ள மேம்பாலம் அருகிலுள்ள சர்வீஸ் சாலையில் மது குடித்துள்ளனர்.
அப்போது இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் திருவேங்கடத்தை கார்த்திக் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த திருவேங்கடம் பர்கூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் கொடுத்த புகாரின் பேரில் கார்த்திக்கை பர்கூர் போலீசார் கைது செய்தனர். அதே போல கார்த்திக் கொடுத்த புகாரின் பேரில் திருவேங்கடத்தையும் போலீசார் கைது செய்தனர்.