கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, குள்ளனுார், தேன்காரன் கொட்டாயில் கடந்த 17-ம் தேதி நடைபெற்ற மாரியம்மன் திருவிழாவில் 2 டூவீலர்கள் திருட்டுப் போனது. இது தொடர்பாக போச்சம்பள்ளி போலீசார் நடத்திய விசாரணையில், திருப்பத்துார் மாவட்டம் பச்சூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் படிக்கும் 16, 17, 18 வயதுடைய 4 மாணவர்கள் சேர்ந்து டூவீலர்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களைக் கைது செய்தனர்.